எடப்பாடி அருகே கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிருடன் மீட்பு
எடப்பாடி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
எடப்பாடி,
எடப்பாடியை அடுத்த பட்டரைகட்டிவளவை சேர்ந்தவர் அம்மாசி. இவருடைய மகன் சின்னஅய்யர் (வயது 45), விவசாயி. இவருடைய மனைவி தங்கம். இவர்களுக்கு சந்திரா (15) என்ற மகளும் தரணி (11) என்ற மகனும் உள்ளனர்.
சின்ன அய்யர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை சின்ன அய்யர் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றார்.
அங்கு எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய அவர், தோட்டத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து விட்டார். தண்ணீர் இல்லாத இந்த கிணற்றில் சேறு இருந்ததால் லேசான சிராய்ப்பு காயம் மட்டுமே அவருக்கு ஏற்பட்டது. இதனிடையே தோட்டத்து பக்கம் சென்ற சின்னஅய்யர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். அப்போது அந்த கிணற்றில் இருந்து சத்தம் கேட்கவே சின்னஅய்யர் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக எடப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் கிணற்றில் இறங்கி கயிறுகட்டி சின்னஅய்யரை உயிருடன் மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்கப்பட்ட அவரை முதலுதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்னஅய்யரின் உறவினர்கள், பொதுமக்கள் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.