நாமக்கல்லில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
நாமக்கல்லில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 2017-2018-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு மைதானம் மற்றும் நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில் நடந்தது. அதன்படி நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீச்சல் போட்டிகள், ஆக்கி, கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடந்தது. செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான 100, 400, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 வயதிற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
இன்றும் நடக்கிறது
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து போட்டியும், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆக்கி, கபடி, கைப்பந்து போன்ற குழு போட்டிகளும் நடக்க உள்ளது. அதே போல் ஆண்களுக்கான ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.