ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவருடைய வருகைப் பதிவேடுகள் மற்றும் அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். மகப்பேறு சிறப்பு சிகிச்சை பிரிவினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், மகப் பேறுக்காக அனுமதிக்கபட்டு இருக்கும் கர்ப்பிணி பெண்களிடம் முறையான தடுப்பூசிகள் உங்கள் பகுதியில் உள்ள கிராம செவிலியர்களால் அளிக்கப்பட்டதா என கேட்டறிந்தார். பின்னர், மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளையும் பார்வையிட்டு மருத்துவமனையை தூய்மையாக பராமரித்திடவும், பொதுமக்களும் மருத்துவமனையை சுகாதாரமாக பயன்படுத்திடவும் அறிவுறுத்தினார். டெங்கு காய்ச்சல் தொடர்பான சிறப்பு சிகிச்சை வார்டை பார்வையிட்டு காய்ச்சல் தொடர்பாக வரும் நோயாளிகளிடம் உடனுக்குடன் சிகிச்சை மேற்கொண்டு டெங்கு இல்லா மாவட்டமாக உருவாக்கிட மருத்துவத்துறை மற்றும் இதர துறையினரும் சிறப்புடன் பணியினை மேற்கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உட னிருந்தனர்.