மயிலம் அருகே அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.4¼ லட்சம் நகை கொள்ளை
மயிலம் அருகே அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தென்பசார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன்கள் சரவணன் (வயது 46), செந்தில்குமார் (44), பிரசன்னகுமார் (36). இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகின்றனர். சரவணனும், செந்தில்குமாரும் திண்டிவனத்தில் வசித்து வருகின்றனர். தென்பசாரில் உள்ள செந்தில்குமாருக்கு சொந்தமான வீட்டில் பிரசன்னகுமார் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தனது மனைவியுடன் பிரசன்னகுமார் படுத்து தூங்கினார். இந்த நிலையில் நள்ளிரவில் பிரசன்னகுமாரின் வீட்டின் பின் பக்க கதவை கள்ளச்சாவி மூலம் மர்மநபர்கள் திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 43 பவுன் நகை மற்றும் 800 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் பிரசன்னகுமார் தூங்கி எழுந்து பார்த்தபோது தனது வீட்டில் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளைபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அளித்த தகவலின் பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்மநபர்கள், நள்ளிரவில் பிரசன்னகுமாரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் கொள்ளைபோன பொருட்கள் அனைத்தும் செந்தில்குமாருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் தாமோதரன் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்து சென்றார். தொடர்ந்து மோப்ப நாய் ‘ராக்கி‘ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மயிலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.