குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் சண்டை: தூக்குப்போட்டு பெண் தற்கொலை
புதுவை முத்தியால்பேட்டை சூர்யா நகர் முதலாவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது29). பெயிண்டர். இவருடைய மனைவி நித்யா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆல்பர்ட்டிற்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி
புதுச்சேரி,
புதுவை முத்தியால்பேட்டை சூர்யா நகர் முதலாவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது29). பெயிண்டர். இவருடைய மனைவி நித்யா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆல்பர்ட்டிற்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதற்கிடையே கடந்த சில தினங்களாக ஆல்பர்ட் சரியாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனை அவருடைய மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நித்யா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.