101 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட எழிச்சூர் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது, 101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2017-12-14 23:46 GMT

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட எழிச்சூர் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமிற்கு வருவாய் ஆர்.டி.ஓ. ராஜூ தலைமை தாங்கினார், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் கலெக்டர் பொன்னையா, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் நலதிட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துக்கூறினர். பின்னர் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான 30 பேருக்கு ஆணை, 37 பேருக்கு வீட்டுமனை பட்டா நகல், 2 பேருக்கு வாரிசுச்சான்றிதழ், 17 இருளர்களுக்கு அடையாள அட்டை என்பது உள்ளிட்ட 101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களில் 122 பேர் கோரிக்கை மனுவை கலெக்டர் பொன்னையாவிடம் வழங்கினர். முகாமில் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் ராமசந்திரன், எஸ்.எஸ்.ஆர். சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்