காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 2 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வடிவனுக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் அங்கு போலீசாருடன் விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. அதைய

Update: 2017-12-14 23:41 GMT

காஞ்சீபுரம்,

அதையொட்டி அவர் அங்கு போலீசாருடன் விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. அதையொட்டி காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 47), சங்கர் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் அயத்தூர் மற்றும் தண்ணீர்குளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 சரக்கு ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர்கள் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆட்டோ டிரைவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்