போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்: பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி
மதுரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் பஸ்கள் முழு அளவில் இயக்கப்படாததால் பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாயினர்.
மதுரை,
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் 48 மணிநேர காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
இந்த போராட்டத்திற்காக அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:-
“தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் சேமிப்பு நிதி, ஓய்வு கால பணப்பலன் என சுமார் 7ஆயிரம் கோடி ரூபாயினை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் செலவு செய்துள்ளது.
இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பலன்கள் கிடைக்கப்பெறாமல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவர்களுக்கு மாதம் முதல் தேதியில் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் தாமதமாக வழங்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வும் தடைபட்டுள்ளது.
தற்போது காலாவதியான பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பயணம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அவற்றை மாற்றுவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசின் பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும். 2003-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் சேர்ந்த பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.”
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு எல்.பி.எப். பொதுச் செயலாளர் அல்போன்ஸ் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன துணைத் தலைவர் பிச்சை, மாவட்டத் தலைவர் அழகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், எங்கள் கோரிக்கைகளை அரசுக்கு நினைவு கூரும் விதமாக இந்த போராட்டத்தை தொடங்கி இருக் கிறோம். இரவிலும் போராட்டத்தை கைவிடாமல் நடத்துகிறோம். அரசு எங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் மதுரையில் ஓடவேண்டிய பஸ்கள் முழுஅளவில் இயக்கப்படவில்லை.
இதனால் அன்றாடம் வேலைக்கு சென்று திரும்புபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.
போராட்டத்தினால் மதுரை பெரியார், காம்பிளக்ஸ், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட 4 பஸ் நிலையங்களிலும் சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன. இதனால் பஸ்நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் பயணிகள் முண்டியடித்து பயணம் செய்ய நேரிட்டது.
பஸ்கள் போதிய எண்ணிக்கையில் ஓடாத காரணத்தால் ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாகவே மதுரை-அலங்காநல்லூர்-பாலமேடு வழித்தடத்தில் சரிவர பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள் காலாவதியாகிவிட்டதால் அவை இயக்குவதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் கூடல்நகர், சிக்கந்தர்சாவடி பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிலும் பிற்பகல் வேளையில் ஒரு மணிநேரம் வரை பஸ்சுக்காக காத்திருக்கவேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே அந்த வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், சரியான நேரத்திற்கு பஸ்களை இயக்க டிரைவர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையிலும், போக்குவரத்து தொழிலாளர்கள் 48 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன் எடுத்துள்ளன. நேற்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் இன்று மாலை நிறைவு பெறுகிறது.
காத்திருப்பு போராட்டம் குறித்து தொ.மு.ச.வின் பொருளாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருங்கால வைப்புநிதி, எல்.ஐ.சி., கூட்டுறவு நாணய சங்க பிடித்தம் என போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பண பலன்களில் இருந்து ரூ.7 ஆயிரம் கோடியை அரசும், நிர்வாகமும் முறைகேடாக எடுத்து செலவழித்துவிட்டது. அந்த பணத்தை வழங்க வலியுறுத்தி கடந்த மே மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினோம். பின்னர் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.
ஆனால் தமிழக அரசு இதுவரையில் அதற்கான எந்தவித முயற்சியையும் செய்யவில்லை. எனவே பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதை வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒப்பந்த பலன்களை ஓய்வூதியத்தோடு இணைந்து வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட அம்சங்களுடன் 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.