கவர்ச்சி திட்டங்களை அறிவித்த நகைக்கடை மீது புகார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு

ஈரோடு,
ஈரோடு ஆர்.என்.புதூரை சேர்ந்த ராமசந்திரன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஈரோடு சத்தி ரோட்டில் தனியார் நிறுவனம் சார்பில் நகைக்கடை அமைக்கப்பட உள்ளது. இந்த கடையை திறப்பதற்கு முன்பே பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அந்த நிறுவனத்தினர் அறிவித்து உள்ளனர். குறிப்பாக 5 பவுன் நகைக்குரிய பணத்தை செலுத்தினால் ஒரு மாதத்தில் 7 பவுன் நகை கொடுக்கப்படும், ரூ.14 ஆயிரம் செலுத்தினால் 45 நாட்களுக்கு பிறகு 1 பவுன் நகை வாங்கிக்கொள்ளலாம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஈமுக்கோழி நிறுவனத்தைபோல் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த நிறுவனத்தினர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.