பொள்ளாச்சியில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கருத்தை திரித்து கூறி மதகலவரத்தை தூண்டி விடுபவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் நாகராசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் தி.மு.க. நிர்வாகி ராஜ்குமார், திராவிடர் விடுதலை கழகம் வெள்ளிங்கிரி, மக்கள் ஜனநாயக கட்சி ஜமீசா, த.மு.மு.க. யாசர் அராபத், எஸ்.டி.பி.ஐ. சையத், தென்னை தொழிலாளர் பேரவை தலைவர் கருப்புசாமி, மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தினேஷ், மாணவர் கழகம் சபரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.