ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

Update: 2017-12-12 07:32 GMT
ந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப் படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது பிளஸ்-2 படித்த பெண்களை, நர்சிங் பயிற்சி அளித்து ராணுவப் பணியில் அமர்த்திக் கொள்ளும் ‘பி.எஸ்சி. நர்சிங் கோர்ஸ்-2018’ பயிற்சி சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்பவர்கள், 4 ஆண்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுடன் அதற்கான சான்றிதழ் பெறலாம். அத்துடன், ராணுவ பணி வாய்ப்பையும் பெற முடியும். இந்திய குடியுரிமை பெற்ற திரு மணமாகாத இளம் பெண்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேரலாம். அவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரத்தை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1-10-1993 மற்றும் 30-9-2001-ந் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

பிளஸ்-2 படிப்பை முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியியல், பாடங்கள் அடங்கிய பிரிவில் படித்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் 4 ஆண்டு காலம் நர்சிங் பயிற்சி பெற்ற பின், பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.

இது பற்றிய விவரங்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 

மேலும் செய்திகள்