1 வாரத்துக்குள் பயிர்க் காப்பீடு தொகை வழங்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் விவசாயிகள் எச்சரிக்கை
பயிர்க் காப்பீடு தொகை வழங்காததால் தஞ்சை வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து விவசாயிகள் முறையிட்டனர். அப்போது 1 வாரத்துக்குள் பயிர்க் காப்பீடு தொகை வழங்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் 1-ம் சேத்தி, கள்ளப்பெரம்பூர் 2-ம் சேத்தி, ராயந்தூர், சித்தாயல், சீராளூர், பனவெளி, தென்பெரம்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2016-17-ம் ஆண்டு பயிர்க் காப்பீட்டிற்காக பிரீமியத் தொகையை கட்டியிருந்தனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கள்ளப்பெரம்பூர் 1-ம் சேத்தி உள்பட 9 கிராமங்களில் 10 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 90 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து விவசாயிகளை அழைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் தென்பெரம்பூர் உள்பட 9 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 5-ந் தேதிக்குள் காப்பீடு தொகை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் தென்பெரம்பூரை தவிர மற்ற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. தென்பெரம்பூரில் உள்ள விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை 20-க்கும் மேற்பட்டோர் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வருவாய் கோட்டாட்சியர் சுரேசை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், கடந்த 5-ந் தேதிக்குள் பயிர்க் காப்பீடு தொகை வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்து இருந்தீர்கள். ஆனால் எங்கள் கிராமம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என முறையிட்டனர். பயிர்க் காப்பீடு தொகை வழங்குவதற்காக உங்கள் பகுதிக்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த பட்டியலில் உங்கள் கிராமம் இடம் பெற்று இருக்கிறதா? என்று தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் என வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தெரிவித்தார்.
இதையடுத்து தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விவசாயிகள் சென்று கேட்டபோது, உங்கள் கிராமம் விடுப்பட்டு இருக்கிறது. அடுத்த பட்டியல் இந்த வார இறுதிக்குள் வரும். அதில் உங்கள் கிராமத்தின் பெயர் கண்டிப்பாக இடம் பெறும். இந்த வாரத்திற்குள் பயிர்க் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற விவசாயிகள், நீங்கள் பணம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்கிறீர்கள். இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் உங்களுக்கு பணம் வரவில்லை என்று கூறுகின்றனர். எப்போது தான் எங்களுக்கு காப்பீடு தொகையை கொடுக்க போகிறீர்கள் என்று கோபமாக கேட்டுவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, பேச்சுவார்த்தையின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி பயிர்க் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் காப்பீடு தொகை வழங்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.