பாரதியார் பிறந்தநாளையொட்டி ‘ஜதி பல்லக்கு’ ஊர்வலம்
பாரதியார் பிறந்தநாளை யொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் ‘ஜதி பல்லக்கு’ ஊர்வலம் நடைபெற்றது.
சென்னை,
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா, தேசபக்தி பெருவிழாவாக கடந்த 9-ந் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்றது. பாரதியார் பிறந்தநாளான நேற்று ‘ஜதி பல்லக்கு’ ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் வெளியே பல்லக்கில் பாரதி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு, பார்த்தசாரதி கோவிலில் இருந்து மலர் மாலை பிரசாதமாக வழங்கப்பட்டு சிலை மீது அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாரதி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் சால்வை மற்றும் பொற்கிழியை சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார். ‘ஜதி பல்லக்கு’ ஊர்வலத்தை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.நட்ராஜ் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தின் முன்பு, பாரதியாரின் கவிதைகளுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆட, பாரதியார் கவிதைகளை வசனமாக பேசியபடியும், பாடியபடியும் ஊர்வலம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து, தெற்கு மாட வீதி வழியாக மேற்கு மாட வீதியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தை சென்றடைந்தது.
பாரதி நினைவு இல்லத்தை ஊர்வலம் சென்றடைந்ததும், பல்லக்குக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாரதியார் சிலை நினைவு இல்லத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், பாரதி சிலைக்கு அணிவிக்கப்பட்ட சால்வை, பொற்கிழி ஆகியவற்றை கவிஞர் ரமணனுக்கு, எழுத்தாளர் சிவசங்கரி வழங்கினார்.
‘ஜதி பல்லக்கு’ ஊர்வலம் நிகழ்ச்சியில் மூத்த வக்கீல் காந்தி, ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே.ரவி, தலைவர் வா.வே.சுப்பிரமணியன், செயலாளர் ஷோபனா ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.