நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவுக்கு நூதன அழைப்பிதழ்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவுக்கு நூதன அழைப்பிதழ் காசோலை வடிவத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

Update: 2017-12-10 23:15 GMT

பெங்களூரு,

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் நாளை(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக அவருடைய ரசிகர்கள் பல்வேறு புதிய முறையில் நிகழ்ச்சிகளை நடத்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தயாராகியுள்ளனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு அமைப்பு சார்பில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா பெங்களூரு ராகிகுட்டாவில் உள்ள கண்பார்வையற்றோர் பள்ளியில் நாளை நடக்கிறது.

இந்த விழாவுக்கான அழைப்பிதழ் நூதன முறையில், அதாவது காசோலை வடிவத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அது அச்சு அசல் காசோலையை போன்றே உள்ளது. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. அந்த அழைப்பிதழில் தொகை எழுதும் பகுதியில் ரஜினிகாந்தின் வயதை குறிக்கும் வகையில் 67 என்று எழுதப்பட்டுள்ளது. தேதி பகுதியில் பிறந்த தினம் எண்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கணக்கு எண் என்ற கட்டத்தில் ரஜினிகாந்த் பிறந்த தினம் இடம் பெற்று உள்ளது.

மேலும் செய்திகள்