விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

திருமங்கலம், வாடிப்பட்டி பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்த போராட்டம் நடத்தினர்.

Update: 2017-12-10 23:00 GMT
திருமங்கலம்,

விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக பா.ஜ.க., இந்து அமைப்பை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் இன்குலாப் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தமிழ் செல்வன் சுந்தரமூர்த்தி, சேகர், அன்புசெல்வன், செல்வ அரசு, சவுரியப்பன், 3 பெண்கள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட 55 பேர் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

வாடிப்பட்டி

இதேபோல வாடிப்பட்டி ஒன்றிய விடுலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் பொறியாளர் தமிழ்நிலவன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதில் தமிழக உழவர் இயக்க மாவட்ட துணை அமைப்பாளர் விடுதலைவீரன், பேரூர் செயலாளர் கே.பி.அரசு, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெயக்குமார், தம்பிவளவன், மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் அருள், யுவராஜா, மகளிரணி ஒன்றிய அமைப்பாளர் ராக்கம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல் சிக்கந்தர்சாவடியில் மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆ.தமிழாளன் தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் தென்னவன், மணியரசு, பூசைபாண்டி, ஆட்டோகண்ணன், சிறுவாலைபூபதி, ராமர், முத்துலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தகவலறிந்த போலீசார் மறியல் போராட்டம் செய்தவர்களை கைது செய்த பின்பு விடுவித்தனர். 

மேலும் செய்திகள்