மலேசியாவில் கொத்தடிமையாக தவித்த தொழிலாளி இந்திய தூதரக உதவியுடன் சொந்த ஊருக்கு திரும்பினார்
மலேசியாவில் கொத்தடிமையாக தவித்த தொழிலாளி, இந்திய தூதரக உதவியுடன் சொந்த ஊருக்கு திரும்பினார்.
சத்திரப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி ஜமீன் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுடைய மகன் காந்தி (வயது 45). இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த முகவர் ஒருவர் மூலம் மலேசியாவில் சலோம் என்ற இடத்தில் செயல்படும் ஒரு கார் நிறுவனத்துக்கு தொழிலாளியாக வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்யும் இடத்தில் நடந்த விபத்தில் இவர் மீது ரசாயனம் கொட்டியது. இதனால் அவருடைய உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாக வேலை செய்யும் நிறுவன உரிமையாளரான செந்தில்நாதன் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் வேறு நபர் வேலைக்கு வரும் வரை உங்களை அனுப்ப இயலாது என அவர் தெரிவித்தார். மேலும் காந்தியின் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டார். இதற்கிடையே காந்தியின் உறவினர் இறந்து போனார். அவருடைய இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கூட காந்திக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் நிறுவனம் தன்னை கொத்தடிமையாக வைத்திருந்தது குறித்து காந்தி தனது பெற்றோரிடம் செல்போனில் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மகனை மீட்க முடிவு செய்தனர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் மலேசியாவில் கொத்தடிமையாக உள்ள தனது மகனை மீட்டு தர வேண்டும் என மனு அளித்தனர்.
அதே போல் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளிடமும், இது குறித்து காந்தியின் பெற்றோர் மனு கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் மற்றும் தனியார் அமைப்பினர் சென்னை தலைமை செயலகம் மற்றும் வெளியுறவுத்துறை மூலம் மலேசியாவில் உள்ள காந்தியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் பலனாக காந்தி வேலை செய்த நிறுவன உரிமையாளரிடம், அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேசினர். பின்னர் காந்தியின் பாஸ்போர்ட்டு, விசா மற்றும் அவருடைய சம்பள பணத்தை கொடுத்து அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க மலேசிய அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்படி காந்தியை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மலேசிய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து விமானம் மூலம் காந்தி இந்தியாவுக்கு புறப்பட்டார். நேற்று காலை அவர் சத்திரப்பட்டி வந்தார். அவருக்கு இனிப்பு வழங்கி, கண்ணீர் மல்க பெற்றோர் வரவேற்றனர்.
தாய்நாட்டுக்கு திரும்பிய காந்தி தனது வெளிநாட்டு அனுபவம் குறித்து கூறியதாவது:-
வெளிநாடுகளுக்கு தொழிலாளியாக வேலைக்கு செல்பவர்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு தான் அங்கு வேலை பார்க்க வேண்டும்.
எனவே நாம் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பு அந்த நிறுவனத்தை குறித்து நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அது நல்ல நிறுவனம் தானா? என்பதை உறுதி செய்த பின்னரே வேலைக்கு செல்ல வேண்டும். அப்போது தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். என்னை மீட்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர், எனது நிலை குறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.