குழந்தை அழுகை ஆகாது

குழந்தை அழுது அடம்பிடித்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறான விஷயம். அது அவர்களுடைய மனநிலையை பாதிக்கும்.

Update: 2017-12-10 05:42 GMT
குழந்தை அழுது அடம்பிடித்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறான விஷயம். அது அவர்களுடைய மனநிலையை பாதிக்கும். பெற்றோர் மீது நம்பிக்கை இழக்கவும் வைத்துவிடும். ‘நீ அழுது அடம்பிடித்தாலும் நீ விரும்பியது எதுவும் நடக்காது’ என்று கூறி குழந்தை களுடன் விவாதம் செய்யவும் கூடாது. அவர்களுடைய செயல் தவறானது என்பதை புரிய வைக்க முயற்சித்தாலும் அதனை கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். அந்த சமயத்தில் குழந்தை களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக பேச வேண்டும். அவர் களுக்கு பிடித்தமான மற்றொரு விஷயத்தை பற்றி பேசி, இயல்பு நிலைக்கு கொண்டு வர வழி காண வேண்டும்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. பிறர் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் பரிவோடு நடந்து கொள்ள வேண்டும். தன்னிடம் இருப்பதை மற்ற குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். அது அடம்பிடிப்பதை தவிர்க்க உதவும். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளிடம், ‘நீ அழாமல் சாப்பிட்டால் உனக்கு பிடித்தமான பிஸ்கட், சாக்லேட் வாங்கி தருவேன்’ என்று கூறினால், பிடிவாதத்தை தளர்த்துவார்கள். அப்போது அன்பாக பேசி, அவர் களுக்கு பிடித்தமான விஷயங்களை கூறி சாப்பிட வைக்கலாம். சாப்பிட்டதும் மறக்காமல் வாக்குறுதி அளித்த பொருளை வாங்கிக்கொடுத்துவிட வேண்டும். அதுபோல் குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களை பாராட்டவும் வேண்டும். கூடவே பரிசு கொடுத்தும் ஊக்குவிக்கலாம். குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அவர் களுடைய விருப்பு, வெறுப்புகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்