ஸ்பூன் மசாஜ்

முகம் மிருதுவாகவும், பொலிவுடனும் காட்சியளிக்க ஸ்பூன்களை கொண்டும் மசாஜ் செய்யலாம். அவை சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து சரும சுருக்கத்தை நீக்கும்.

Update: 2017-12-10 04:19 GMT
முகம் மிருதுவாகவும், பொலிவுடனும் காட்சியளிக்க ஸ்பூன்களை கொண்டும் மசாஜ் செய்யலாம். அவை சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து சரும சுருக்கத்தை நீக்கும்.

இரண்டு ஸ்பூன்கள், ஒரு கப் ஆலிவ் ஆயில் அல்லது சூரிய காந்தி எண்ணெய், ஒரு கப் குளிர்ந்த நீர், சிறிது பனிக்கட்டி ஆகியவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் முகத்தை நன்றாக கழுவி பருத்தி துணியால் துடைத்து கொள்ள வேண்டும். எண்ணெய்யில் ஸ்பூனை ஒரு நிமிடம் வைத்துவிட்டு, அதன் பின்பகுதியை முகத்தில் மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாடி, கன்னம், நெற்றி, மூக்கு கண் இமை என முகத்தின் அனைத்து பகுதியிலும் தேய்த்து மென்மையாக வருட வேண்டும்.

ஸ்பூனில் வெதுவெதுப்பு தன்மை குறைந்து போனால் மீண்டும் எண்ணெயில் சிறிது நேரம் மூழ்க வைத்துவிட்டு மசாஜை தொடர வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடமாவது மசாஜ் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மசாஜ் செய்து முடித்தவுடன் சுத்தமான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இந்த மசாஜ் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.

கண்களுக்கு அடியில் தொங்கும் தசையை நீக்கவும் ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்யலாம். குளிர்ந்த நீரில் ஐஸ்கட்டி சேர்த்து அதில் ஸ்பூனை போட வேண்டும். ஸ்பூன் நன்கு குளிர்ந்த நிலையை அடைந்ததும் அதன் பின்பகுதியை கண் இமைகளின் மேல் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். ஸ்பூன் சூடான நிலையை அடைந்தால் மீண்டும் குளிர்ந்த நீரில் நனைத்து பயிற்சியை தொடர வேண்டும். பின்னர் கண் களுக்கு அடியில் ஸ்பூனை சில நிமிடங்கள் வைக்க வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் அடியில் இருக்கும் தசைப்பை நீங்கும்.

மேலும் செய்திகள்