நாட்டை ஆளும் தகுதியை ராகுல்காந்தி வளர்த்து கொண்டார் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் பேட்டி

நாட்டை ஆளும் தகுதியை ராகுல்காந்தி வளர்த்து கொண்டார் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் தெரிவித்தார்.

Update: 2017-12-09 22:15 GMT

புனே,

நாட்டை ஆளும் தகுதியை ராகுல்காந்தி வளர்த்து கொண்டார் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் தெரிவித்தார்.

சஞ்சய் ராவுத் எம்.பி.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. நேற்று புனே சேனா பவனில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி நல்ல தலைவராக உருவெடுத்து விட்டார். குஜராத்திலும் சரி, நாட்டின் பிற பகுதியிலும் சரி, பொதுமக்களுடன் அவர் தொடர்பு கொள்ளும் விதம், நாட்டை ஆள்வதற்கு அவர் தயாராகி விட்டார் என்பதை தெளிவாக காட்டுகிறது. நாட்டை ஆளும் தகுதியை ராகுல்காந்தி வளர்த்து கொண்டார்.

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, அங்கு பிரதமர் மோடி முகாமிட அவசியமில்லை. வெறும் வளர்ச்சி திட்டத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு தேர்தலில் வென்றுவிட முடியாது. ஜி.எஸ்.டி. நடைமுறையால் குஜராத் மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி.யின் தாக்கம் குஜராத் சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதும் உணரப்படும்.

நாட்டில் தற்போது மோடி அலை இல்லை. இதனை குஜராத் சட்டசபை தேர்தல் முடிவு விரைவில் வெளிப்படுத்தும்.

இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்.

வாக்குச்சீட்டு

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் கூறியது குறித்து கேட்டதற்கு, ‘‘பா.ஜனதாவை தவிர மற்ற எல்லா கட்சிகளும் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றன’’ என்று அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்