அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை கலெக்டர் தொடங்கி வைத்தார்
அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2017-18ம் ஆண்டிற்கான கரும்பு அரவையை தொடங்குவதற்காக கடந்த மாதம் 18-ந்தேதி ஆலையில் கொதிகலன் சூடேற்றும் விழா நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) காலையில் கரும்பு அரவையை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார். ஆலையின் மேலாண்மை இயக்குனர் கந்தசாமி வரவேற்றார். ஆலை நிர்வாக குழுத்தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் கரும்பு விவசாய சங்கத்தலைவர்கள் வக்கீல் பழனிச்சாமி, நல்லமணிகாந்தி, அப்பாஸ், அழகர்சாமி, அலுவலக மேலாளர் ரெக்ஸ் உள்பட விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள், ஆலை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கரும்பு அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.
ஆலையின் நிர்வாக தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- நடப்பு அரவை பருவத்தில் 50 ஆயிரம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சியின் காரணமாக 3 ஆயிரத்து 413 ஏக்கர் மட்டுமே பதிவாகி உள்ளது. மேலும் 2017-18-ம் ஆண்டில் அதிக அளவில் கரும்பு பதிவு செய்து உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
நடப்பு அரவை பருவத்திற்கு பதிவு செய்யாத கரும்புகளும் ஏற்றுக்கொள்ளப்படும். சராசரி சர்க்கரை கட்டுமானம் 9.5 சதவிகிதம் என குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர அனைத்து கோட்டத்திற்கும் கரும்பு வெட்டுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு அரவை பருவத்திற்கு சப்ளை செய்யப்படும் கரும்பிற்கு மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ள கரும்பு ஆதார விலை டன் 1க்கு ரூ 2 ஆயிரத்து 550 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கரும்பு ஏற்றிவரும் வாகனங்களுக்கு வாடகை தொகை முழுவதையும் விவசாயிகள் நலன் கருதி ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.