ரூ.61 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
புதுச்சத்திரம் ஒன்றிய பகுதியில் ரூ.61¾ லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளம்பாடி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி, இதே ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணி, ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மின்னாம்பள்ளி ஊராட்சி கணவாய்பட்டியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் ‘பேவர் பிளாக்’ சாலை அமைக்கப்பட்டு வரும் பணி உள்பட புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.61 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக மின்னாம்பள்ளி ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்ற மாவட்ட கலெக்டர், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக வீடுகளில் ஆய்வு செய்த கலெக்டர் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளில் அதிக நாட்கள் நீர் சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். நீர் சேமிக்கும் பாத்திரங்களை கட்டாயம் மூடி வைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது புதுச்சத்திரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், சண்முகம், ஒன்றிய பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் அருண், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வதி, வளர்மதி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.