விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் 20 பேர் கைது
ராசிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் 20 பேர் கைது
ராசிபுரம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி என அறிவித்த இந்து மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் கோபிநாத்தை வன்கொடுமை மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆதவன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அரசன், துணை செயலாளர் நீலவானத்து நிலவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வக்கீல் மகேந்திரன், ராசிபுரம் தொகுதி செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொகுதி துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட கிறிஸ்தவ சமூக நீதி பேரவை பெஞ்சமின், தொழிலாளர் விடுதலை முன்னணி சரவணன், நகர இளஞ் சிறுத்தை பிரிவு பூபதி உள்பட பலர் கலந்து கொண்டு கோபிநாத்தை கைது செய்யும்படி கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென்று புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராசிபுரம் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் உள்பட 20 பேரை கைது செய்தனர்.