திருமாவளவன் உருவ பொம்மையை எரித்து சாலை மறியல் பா.ஜ.க.வினர் 17 பேர் கைது
திருச்சியில் திருமாவளவன் உருவ பொம்மையை எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
மலைக்கோட்டை,
இந்து கோவில்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறி, அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பாரதீய ஜனதா கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் கவுதம் நாகராஜன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் இளைஞர் அணியினர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் நேற்று திரண்டனர். பின்னர் மணிசங்கர் அய்யர், திருமாவளவன் ஆகியோரின் உருவபொம்மையை எடுத்து வந்து பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் தலைமையிலான போலீசார் இரண்டு உருவபொம்மைகளையும், அவர்களிடம் இருந்து கைப்பற்ற முயன்றனர். இதில் மணிசங்கர் அய்யர் உருவபொம்மையை பறித்தனர். ஆனால் திருமாவளவன் உருவபொம்மைக்கு தீ வைக்கப்பட்டு, பற்றி எரிந்தது. இதையடுத்து உருவபொம்மை மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
மேலும், போலீசாருக்கும், பாரதீய ஜனதா இளைஞர் அணியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமாவளவனை கண்டித்தும், மணிசங்கர் அய்யரை கண்டித்தும் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி மறியல் செய்தனர். இதையடுத்து ஒரு பெண் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.