ஊட்டியில் ஓட்டல் தீப்பிடித்து எரிந்து நாசம்
ஊட்டியில் நேற்று அதிகாலை ஓட்டல் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
ஊட்டி,
ஊட்டி கூட்ஷெட் சாலையில் பழைய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அருகே ஒரு தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலை விஜயா (வயது 49) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு காலை மற்றும் மதியம் வேளைகளில் உணவு, தேநீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்கு சமையல் செய்வதற்கு விறகுகள் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அந்த ஓட்டல் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு மரக்கட்டைகள் கிடந்ததால் தீ மளமளவென பரவியது. இதனை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து ஊட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஓட்டலில் இருந்த பாத்திரங்கள், அடுப்புகள், மேஜைகள், நாற்காலிகள் எரிந்து நாசமானது. மேலும் ஓட்டலின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் கீழே விழுந்து, ஓட்டல் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. ஓட்டலில் இரவு நெருப்பை சரியாக அணைக்காமல் விட்டதால், தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஓட்டலின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டோ எரிந்து எலும்புக் கூடானது. தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவில் அணைத்து விட்டதால், அருகே உள்ள மரக்கடை தப்பியது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தீ விபத்தால் ஓட்டலில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக போலீசார் தெரிவித்தனர்.