காஞ்சீபுரம் அருகே கணவர், மகன் இறந்த ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

காஞ்சீபுரம் அருகே கணவர், மகன் இறந்த ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-12-09 23:00 GMT
சென்னை,

காஞ்சீபுரம் அருகே சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் உமா (வயது 52). இவரது கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். மேலும் அவரது மூத்த மகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அவர்கள் இருவரும் இறந்த பின்னர் உமா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

கணவர், மகன் இறந்த ஏக்கத்தில் நேற்று முன்தினம் உமா திடீரென்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தற்கொலை குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்