வீட்டின் ஜன்னலை உடைத்து 9 பவுன் நகை- ரூ.15 ஆயிரம் திருட்டு போலீசார் வலைவீச்சு

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் வீட்டின் ஜன் னலை உடைத்து 9 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-12-09 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் புதிய பஸ்நிலை யம் கால்நடை மருத்துவமனை பின்புறமுள்ள பகுதியில் வசித்து வருபவர் சின்னசாமி (வயது 60). இவர், கடலூர் மாவட்டம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) சீனியர் போர்மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இவர், தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னை கிண்டியிலுள்ள மகன் வீட்டிற்கு சென்றார். இதனை நன்கு நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் பீரோக்களி லிருந்த வளையல், தோடு உள்ளிட்ட 9 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை சின்னசாமி வீட்டு ஜன்னல் உடைக்கப்பட் டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வீட்டில் திருடர்கள் நுழைந்திருப்பதை உறுதி செய்து, இது குறித்து சின்னசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பதறியடித்தபடி சென்னையிலிருந்து பெரம்பலூருக்கு புறப்பட்டு வந்த சின்னசாமி வீட்டுக்குள் சென்று பார்த்த போது நகை- பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் உடைக்கப்பட்ட ஜன்னலை பார்வையிட்டு, திருடர்கள் குறித்த தடயம் ஏதும் இருக்கிறதா? என விசாரித்தனர். அப்பகுதியில் கட்டுமானப்பணிகள் நடந்து வரும் ஒரு கட்டிடத்தில் இருந்து மரநாற்காலிகளை எடுத்து வந்து திருட பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் துறைமங்கலம், வெங்கடேசபுரம், வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் சாலை உள்ளிட்ட பல இடங் களில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை பிடித்து நகை- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க போலீஸ்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றால் திருட்டு நடந்து விடுகிறது. இதனை தடுக்க போலீஸ்துறை தான் புதிய முயற்சிகளை எடுத்து ஒரு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் செய்திகள்