திருவட்டார் அருகே மின்சாரம்–குடிநீர் கேட்டு சாலை மறியல்
திருவட்டார் அருகே மின்சாரம், குடிநீர் கேட்டு பொதுமக்கள் கஞ்சி காய்ச்சி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவட்டார்,
ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் பல மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பல பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை.
திருவட்டார் அருகே தேமானூர், முள்ளுவிளை, மத்திவிளை போன்ற 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் முறிந்த மின்கம்பங்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் இதுவரை மின்வினியோகம் நடைபெறவில்லை. அத்துடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை தேமானூர் சந்திப்பில் மின்சாரம்–குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது, அந்த பகுதி வழியாக வந்த அரசு பஸ் மற்றும் பிற வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.
இதற்கிடையே போராட்டம் நடந்த இடத்தில் பொதுமக்கள் அடுப்பு கூட்டி கஞ்சி காய்ச்சினர். இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சீரமைப்பு பணி உடனே தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
அத்துடன், மின்வாரிய ஊழியர்கள் சென்று பணிகளை தொடங்கினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.