ரசாயனக் கழிவுகளை சுத்திகரிக்கும் தாவரம்
ரசாயனக் கழிவுகளை சுத்திகரிக்கக்கூடிய தாவரம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மனித செயல்பாடுகளால் உண்டாகும் அணுக் கசிவு, தொழில் நடவடிக்கைகள் போன்றவற்றால் வெளியேறும் ரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கு இந்தத் தாவரங்கள் இயற்கையாக உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தாவரங்கள், அந்த நாட்டை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இத் தாவரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு, குறைந்த மழைவீழ்ச்சி மற்றும் வெப்பக் கதிர்வீச்சுக்கள் காரணமாக இத்தாவரங்கள் அந்நாட்டில் குறைவாகவே காணப்படுகின்றனவாம்.
எனவே எதிர்காலத்தில் இத்தாவரங்களின் அளவை அதிகரிப்பது, அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறிவது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
எங்கே சென்றாலும் கடைசியில் இயற்கையிடம் வந்துதான் தஞ்சம் அடைய வேண்டும்!