தாம்பரத்தில் கொடிநாள் விழா
கொடிநாள் விழா காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் தாம்பரத்தில் நடைபெற்றது.
தாம்பரம்,
முப்படைகளில் பணியாற்றும் வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் கொடிநாள் விழா காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் தாம்பரத்தில் நடைபெற்றது.
விழாவில் தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகர், முன்னாள் விமானப்படை அதிகாரி வர்தமான், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ரூபா சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் அருணாசல பிரதேச மாநிலத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர் பாலாஜியின் குடும்பத்தினருக்கு நிகழ்ச்சியில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.