கடையநல்லூரில் கார்–மோட்டார்சைக்கிள் மோதல்; ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்
கடையநல்லூரில் கார், மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். கூலி தொழிலாளி நெல்லை மாவட்டம் கடையநல்லூர் காசிதர்மம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், கருப்பசாமி மகன் மாரியப்பன் (வயது 23). கூலி தொழிலாளியான
கடையநல்லூர்,
கடையநல்லூரில் கார், மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கூலி தொழிலாளிநெல்லை மாவட்டம் கடையநல்லூர் காசிதர்மம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், கருப்பசாமி மகன் மாரியப்பன் (வயது 23). கூலி தொழிலாளியான இவர், கடையநல்லூர் பெண்கள் பள்ளிக்கூடம் அருகே உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். இவரும், அதே கடையில் வேலை செய்யும் அவரது நண்பர் கடையநல்லூர் பேட்டை மலம்பேட்டை தெருவை சார்ந்த நிவான் பிச்சை மகன் சாகுல் ஹமீது (21) என்பவரும் கடை வேலையை முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் குற்றாலத்துக்கு குளிக்க சென்றனர். அங்கு குளித்துவிட்டு மீண்டும் கடையநல்லூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கார் மோதி பலிகடையநல்லூர் அட்டைக்குளம் அருகே சென்ற போது, எதிரே அந்த வழியாக வந்த காரும், அவர்களது மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் இருந்த சாகுல் ஹமீதுவும் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் விசாரணை நடத்தி வருகிறார்.