மோட்டார்சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்பகோணம்,
கும்பகோணம் தேவனாஞ்சேரி முல்லியாற்றங்கரை பகுதியில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்களை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 பேரும் மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.
வாலிபர் கைது
இதில் 3 பேர் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பாணாதுரை கள்ளர் தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 22) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்த, மோட்டார்சைக்கிள், 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.