சாவில் இருந்து விமோசனம் பெற உணவு, தண்ணீர் இன்றி 4 அடி ஆழ குழியில் தியானம் செய்யும் காண்டிராக்டர்
கனவில் தோன்றிய கரிபசம்மா தேவி கூறியதாக சாவில் இருந்து விமோசனம் பெற உணவு, தண்ணீர் இன்றி 4 அடி ஆழ குழியில் காண்டிராக்டர் தியானம் செய்கிறார்.
பெங்களூரு,

இந்த வினோத சம்பவம் கலபுரகி மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
4 அடி ஆழ குழியில் தியானம்
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் நந்திகூர் கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார் பவார் (வயது 35). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 5-ந் தேதி மாலையில் திடீரென்று விஜயகுமார் பவார் தனது உறவினர்கள் உதவியுடன் கொத்தனூர் (டி) கிராமத்தில் உள்ள கரிபசம்மா தேவி கோவிலின் முன்பு 4 அடி ஆழ குழி தோண்டினார்.
பின்னர், விஜயகுமார் பவார் அந்த குழியின் உள்ளே இறங்கி அமர்ந்து உணவு, தண்ணீர் இன்றி தியானம் செய்ய தொடங்கினார். அதைத்தொடர்ந்து, அவருடைய உறவினர்கள் குழியின் மேல்புறத்தை மரக்கிளைகளை கொண்டு மூடினார்கள். மேலும், விஜயகுமார் பவார் தியானம் செய்யும் இடத்தை சுற்றி மஞ்சள், குங்குமம் மற்றும் சாம்பலால் வட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தியானம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.
கனவில் தோன்றிய கரிபசம்மா தேவி
இவருக்கு துணையாக அந்த கோவிலின் அருகே அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் இருக்கிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்தியாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். எதற்காக விஜயகுமார் பவார் குழி தோண்டி தியானம் செய்கிறார்? என்று அவருடைய சகோதரர் ரமேசிடம் கேட்டனர்.
இதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘கடந்த 3-ந் தேதி விஜயகுமார் பவாரின் கனவில் கரிபசம்மா தேவி தோன்றியுள்ளார். 4 அடி ஆழ குழி தோண்டி அதில் அமர்ந்து உணவு, தண்ணீர் இன்றி 3 நாட்கள் தியானம் செய்தால் நீண்டகாலம் உயிருடன் வாழ்வாய் என்று கரிபசம்மா தேவி அவரிடம் தெரிவித்துள்ளார். இதை செய்யாவிட்டால் 3 நாட்களில் இறந்துவிடுவாய் எனவும் கரிபசம்மா தேவி எச்சரித்துள்ளார். எனவே, சாவில் இருந்து விமோசனம் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசையில் கரிபசம்மா தேவி கோவிலின் முன்பு விஜயகுமார் பவார் 4 அடி ஆழ குழி தோண்டி உணவு, தண்ணீர் இன்றி தியானம் செய்து வருகிறார்‘ என்றார்.
இந்த வினோத சம்பவம் கலபுரகி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.