உடுமலை மனமகிழ் மன்றத்திற்கு சீல் வைப்பு; மின் இணைப்பும் துண்டிப்பு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி உடுமலை மனமகிழ் மன்றத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
உடுமலை,
உடுமலை வ.உ.சி.வீதி, கல்பனா ரோடு சந்திப்பில் மனமகிழ் மன்றம் உள்ளது. இந்த இடம் நகராட்சி பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனமகிழ் மன்றத்தின் வளாகத்தில் 3 தங்கும் அறைகள், உணவு அறை, பிரதான ஹால் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு மைதானம் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமும் உள்ளது. வடபுறம் கச்சேரி வீதியில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
மனமகிழ் மன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மனமகிழ் மன்றத்திற்கு நோட்டீசு அனுப்பி இருந்தது. நகராட்சிக்கும் மனமகிழ் மன்றத்துக்குமான பிரச்சினை சில காலமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நகராட்சி அதிகாரிகள் மனமகிழ் மன்றத்திற்கு சென்று அங்கு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்தாக கூறப்படும் 3 தங்கும் அறைகளுக்கு சீல் வைத்தனர். இதன் தொடர் நடவடிக்கையாக அங்கு மீண்டும் சென்ற அதிகாரிகள் பிரதான ஹாலுக்கு சீல் வைத்தனர். அத்துடன் கடைகள் கட்டப்பட்டு இருந்த பகுதியின் மேல்தளத்தில் வாடகைக்கு விடப்பட்டு இருந்த 3 அறைகளுக்கும் சீல் வைத்தனர்.
உடுமலை நகராட்சிக்கும், மனமகிழ் மன்றத்திற்குமான பிரச்சினை குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த மனமகிழ் மன்ற வளாகத்தின் பிரதான நுழைவு வாயில் எப்போதும் போல் திறந்து இருந்தது. மனமகிழ் மன்ற வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு எப்போதும் போல் சிறுவர்கள் சென்று பூப்பந்து விளையாடி வந்தனர். மனமகிழ் மன்ற கட்டிடத்தின் (ஹால்) பிரதான வாயில் சீல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் இந்த வளாகத்தின் பின் பக்க கதவு வழியாக மனமகிழ் மன்றத்திற்குள் வந்து, மனமகிழ் மன்றத்தை பயன்படுத்துவதாக நகராட்சி தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மனமகிழ் மன்றத்தின் பின் பக்க கதவுகளுக்கும் சீல் வைக்கும்படியும், மின் இணைப்பை துண்டிக்கும்படியும் சென்னை ஐகோர்ட்டு நகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி நகராட்சி நிர்வாகம் தரப்பில் போலீஸ் நிலையத்தில்கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று மதியம் நகராட்சி அதிகாரிகள் உடுமலை மனமகிழ் மன்றத்திற்கு வந்தனர். அதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். முதலில் மனமகிழ் மன்றத்தின் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். பின்னர் மனமகிழ் மன்ற வளாகத்தின் பின் புறத்தில் உள்ள கதவு மற்றும் மனமகிழ் மன்ற கட்டிட அறைகளின் 4 பின்புற கதவுகள், மனமகிழ் மன்ற வளகத்தின் பிரதான நுழைவு வாயில் ஆகியவற்றுக்கும் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.