சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்து பயணம் கண்டு கொள்ளாத போலீசார்
சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்கிறது. அதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டம் முழுவதும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்கிறது. அதிக வேகம், அதிக பாரம் ஏற்றிச் செல்வது விபத்துக்கு வழிவகுக்கும். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதும் விபத்துகள் அதிகரிக்க காரணமாகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதும், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதும், வாகனங்களில் ஆபத்தான பயணம் செய்வதும் அதிக அளவில் நடக்கிறது.
சரக்கு வாகனங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு, அதன்மேல் ஆபத்தான வகையில் ஆட்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர். அதேபோல், ஆட்டோக்கள், மினிபஸ்களிலும் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.
அத்துடன் தனியார் பஸ்கள் நகர் பகுதிகளில் அசுர வேகத்தில் பயணம் செய்கின்றன. நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் மிரள வைக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை ஒலிக்க வைத்தபடி செல்லும் தனியார் பஸ்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுபோன்ற அதிக வேகம், அதிக பாரம் தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர்களோ, போலீசாரோ தொடர் நடவடிக்கைஎடுப்பது இல்லை. தேனி, சின்னமனூர் போன்ற பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த நிற்கும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை கடந்தே இதுபோன்ற பயணங்கள் அன்றாடம் நடக்கிறது. இருப்பினும் அவற்றை கண்டுகொள்ளாதது போல் போலீசாரின் செயல்பாடு உள்ளது.
இதனால், விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிக வேகமாக செல்லும் வாகனங்கள் மீதும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதும் தொடர் நடவடிக்கை எடுக்க போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.