மயிலாப்பூரில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை
சென்னை மயிலாப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் அப்பு தெருவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 75). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். நேற்று முன்தினம் காலையில் இவர் தியாகராயநகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். இரவு வீடு திரும்பியபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து 22 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் கொடுத்துள்ளார்.