டிரைவர், கண்டக்டரிடம் மாணவர்கள் வாக்குவாதம்: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரியலூர்,
அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு முட்டுவாஞ்சேரிக்கு சென்ற அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கண்டக்டர் அந்த 2 மாணவர்களையும் படியில் நிற்காமல் உள்ளே வருமாறு கூறினார். இதனால் கண்டக்டருக்கும், மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த மாணவர்கள் தங்கள் செல்போன் மூலம் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளனர். பஸ் அஸ்தினாபுரம் அருகே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மாணவர்களின் நண்பர்கள் 8 பேர் பஸ்சை மறித்து டிரைவர், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அங்கிருந்த மாணவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.