வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு திருவள்ளூர் கலெக்டர் தகவல்

வாக்காளர் பட்டியலை திருத்த கால அவகாசம் வருகிற 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-12-06 22:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற ஜனவரி 1-ந்தேதியை (2018) தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை சுருக்கமுறையில் திருத்தும் பணி நடந்து வந்தது. இதற்கான காலஅவகாசம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இந்த கால அவகாசம் வருகிற 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்கள் அளித்து பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக்கொள்வார்கள். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பெறப்படும் அனைத்து படிவங்களும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்