பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து நாகையில் நேற்று த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான நேற்று நாகை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செய்யதுரியாசுதீன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத்அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ஹமீதுஜெகபர், ஷேக்மன்சூர், யூசுப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விரைந்து முடிக்கக்கோரியும், பாபர் மசூதி இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் பாண்டியன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை பாராளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிவானந்தம், தமிழ் தேசிய பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் சிவவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.மு.மு.க.
இதேபோல் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜபருல்லா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சிராஜுதீன், அஸ்ரப்அலி, அப்துல்காதர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் சாதிக்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் முகமதுநெய்னா வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி நாகை தெற்கு மாவட்ட செயலாளர் இப்ராகிம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர்கள் முகமதுரபீக், முகமதுசுலைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் நாகை அபிராமி அம்மன் சன்னதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அக்பர்அலி தலைமை தாங்கினார். இதில் மாநில பேச்சாளர் இமாம்ஹசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.யை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.