61-வது நினைவு தினம்: அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கர் 61-வது நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி,
டாக்டர் அம்பேத்கரின் 61-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தி.மு.க. சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கலை, கோவிந்தராஜன் ஆகியோரும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாகராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட தலைவர் தங்க.ராஜய்யன், உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பல்வேறு அமைப்புகள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் திருச்சி மாநகர், மாவட்ட தலைவர் நந்தா கே.செந்தில்வேல், வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் குணா ஆகியோரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் கட்சியினரும் மாலை அணிவித்தனர்.
இதே போன்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினரும், மக்கள் மறுமலர்ச்சி கழகம், அகில இந்திய சட்ட உரிமை கழகம், திருச்சி கோட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.