பெரியகுளத்தில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரியகுளம் வடகரை புதிய பஸ் நிலையம் அருகில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளம்,
பெரியகுளம் வடகரை புதிய பஸ் நிலையம் அருகில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் அல்லாபக்ஸ் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் அகமது, திராவிடர் கழகம் சார்பில் மத்திய கழக பேச்சாளர் பெரியார் செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் அகமது முஸ்தபா, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் உள்பட இஸ்லாமிய பெண்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பாபர் மசூதி இடிப்புக்கு நீதி கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.