பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் தலைமை தாங்கி னார். மாநில செயலாளர் அப்துல் சத்தார், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் சையது இப்ராகிம் உஸ்மானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்ட வேண்டும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அபுபக்கர் சித்திக், ஜியாவுதீன் அகமது, முகம்மது பாரூக், அப்துல் கனி, அகமது இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.