சேலத்தில் முதியவரை கொன்ற மகள், நண்பருடன் கைது உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
சேலத்தில் முதியவரை கொன்ற மகள், நண்பருடன் கைது செய்யப்பட்டார். உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் அரிசிப்பாளையம் சின்னப்பகவுண்டர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கமலா(வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கிழங்கு மில்லில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கமலாவின் தந்தை பழனிசாமி(95). உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கவனிப்பார் யாருமின்றி அதே பகுதியில் உள்ள சுகாதார வளாகம் முன்பு படுத்து தூங்கி வந்தார். யாராவது கொடுக்கும் உணவு பொருட்களை அவர் வாங்கி சாப்பிட்டு வந்தார்.
அடிக்கடி மகள் கமலா வீட்டுக்கும் செல்லும் பழனிசாமி அங்கு அசுத்தம் செய்துள்ளார். மேலும் அவர், மகளை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கமலா மனவேதனை அடைந்தார். இதையடுத்து அவர், கிழங்கு மில் ஒன்றில் வேலை செய்யும் தனது நண்பரான அம்மாபேட்டையை சேர்ந்த சண்முகம்(40) என்பவரை சந்தித்து இதுபற்றி கூறினார். மேலும் நண்பரிடம் தனது தந்தையை கொலை செய்ய அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 3-ந் தேதி சண்முகம், பழனிசாமியை கிழங்கு மில்லுக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு அவர் மீது கிழங்கு மூட்டைகளை போட்டு நசுக்கி கொலை செய்தார். அதைத்தொடர்ந்து அங்குள்ள காலிமனை இடத்தில் குழியை தோண்டி பழனிசாமியை அவர் புதைத்து உள்ளார்.
இந்த நிலையில் குடோன் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதுடன், ஒருவரின் கை விரல்கள் வெளியே தெரிந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடோனின் மேற்பார்வையாளர் குமார் நேற்று முன்தினம் இதுபற்றி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இரவு நேரமாகி விட்டதாலும், வருவாய்த்துறையினர் அனுமதி பெற வேண்டி இருந்ததாலும் முதியவரின் உடலை உடனடியாக தோண்டி எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து மேற்கு தாசில்தார் திருமாவளவன் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் டாக்டர் கோகுலரமணன் தலைமையிலான டாக்டர்கள் பழனிசாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடைய உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலை தோண்டி எடுத்த குடோன் முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். அவர்களை, உடல் தோண்டி எடுக்கும் இடம் அருகே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே கமலா மற்றும் அவருடைய நண்பர் சண்முகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று கமலா, சண்முகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் முதியவரை கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.