வங்கியில் 337 அதிகாரி பணிகள்

பரோடா வங்கியில் அதிகாரி பணிகளுக்கு 337 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2017-12-06 05:37 GMT
பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. இந்தியா முழுவதும் பரவலாக கிளைகளைக் கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது மேலாளர், குழு தலைவர், நிர்வாக அதிகாரி போன்ற பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 337 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு 223 இடங்களும், அக்குயிசிசன் மேனேஜர் பணிக்கு 41 இடங்களும், கிளைன்ட் சர்வீஸ் எக்சிகியூட்டிவ் பணிக்கு 43 இடங்களும் உள்ளன. டெரிட்டோரி ஹெட், ஆபரேசன்ஸ் ஹெட், குரூப் கெட் போன்ற பணிகளுக்கும் இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு :

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. 12-12-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. அரசு விதிகளின்படி ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பட்டப்படிப்பு படித்தவர்கள், எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் அல்லது நேர்காணல் ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
12-12-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.


விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bankofbaroda.co.in    என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்