கள்ளக்குறிச்சி அருகே கொத்தனாரின் மனைவி- மகன் கைது
கள்ளக்குறிச்சி அருகே 2 பேர் மர்ம சாவு வழக்கில் கொத்தனாரின் மனைவி, மகன் கைது மதுவில் விஷம் கலந்து கொன்றது வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சடையாண்டி மகன் ராஜேந்திரன்(வயது 48), கொத்தனார். இவருக்கு செல்வி(37) என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் தியாகதுருகத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பும், மகள் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ராஜேந்திரன் உறவினரான அதேஊரை சேர்ந்த விவசாயி சோலை(46) என்பவருடன் சேர்ந்து மதுகுடிப்பது வழக்கம்.
அந்த வகையில் நேற்று முன்தினம் காலை ராஜேந்திரன் உறவினரான சோலையை மதுகுடிக்க வீட்டுக்கு வரவழைத்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவை ஊற்றி குடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் ராஜேந்திரன் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோலையும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.
இதுகுறித்து வரஞ்சரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு, அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த செல்வி, தனது மகனுடன் சேர்ந்து, மதுபாட்டிலில் விஷத்தை கலந்து வைத்துள்ளனர். அதை குடித்த ராஜேந்திரன், சோலை ஆகிய 2 பேரும் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வியையும், அவருடைய 17 வயது மகனையும் போலீசார் கைது செய்தனர். அப்போது செல்வி போலீசாரிடம் அளித்து வாக்குமூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
ராஜேந்திரன் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு, வந்து அடிக்கடி தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். மேலும் தனது மகன், மகள் வீட்டில் இருக்கும்போதே தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு கட்டாயப்படுத்தி அடித்து துன்புறுத்தியும் வந்தார். இதனால் அவரை கொலை செய்வது என நானும், எனது மகனும் சேர்ந்து திட்டம் போட்டோம். அதன்படி நேற்று முன்தினம் ராஜேந்திரன் வாங்கி வீட்டில் வைத்திருந்த மதுபாட்டிலில் விஷத்தை கலந்து வைத்து விட்டோம். அதை ராஜேந்திரன் குடித்து இறப்பார் என்று எண்ணினோம். ஆனால் அவருடன் சேர்ந்து உறவினர் சோலையும், விஷம் கலந்து மதுவை குடித்து உயிரிழந்து விட்டார்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.