வேளாங்கண்ணி அருகே ஆற்றில் படகு கவிழ்ந்து கல்லூரி மாணவர் மாயம் தேடும் பணி தீவிரம்
வேளாங்கண்ணி அருகே ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த முருகேசன் மகன் சுஷ்மிதாசன் (வயது17). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுடன் சேர்ந்து நேற்று காலை 11 மணியளவில் செருதூர் வெள்ளையாற்றில் பைபர் படகில் அமர்ந்தபடி மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் நீரோட்டம் வேகமாக இருந்ததால், படகு திடீரென கவிழ்ந்ததில் இருவரும் விழுந்தனர். இதனால் கூச்சல் போட்ட சிறுவனை கரையில் இருந்த மீனவர் ஒருவர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ஆனால் சுஷ்மிதாசனை காணவில்லை.
இதையடுதத்து செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் சுஷ்மிதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் விழுந்த சுஷ்மிதாசன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதை தடுக்க முகத்துவார பகுதியில் மீனவர்கள் வலைகளை கட்டி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி, கீழையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனவர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் சுஷ்மிதாசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.