பள்ளி தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்த மாணவி வெளியே வர முடியாமல் தவித்ததால் பரபரப்பு

வெள்ளகோவில் உயர்நிலைப்பள்ளியின் மாடியில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி, அங்கு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.

Update: 2017-12-05 22:00 GMT

வெள்ளகோவில்,

வெள்ளகோவிலில் மகளிர் உயர்நிலைப்பள்ளியின் மாடியில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி, அங்கு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து அந்த மாணவி மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி தொட்டியை சுத்தம் செய்துள்ளார். ஆனால், தொட்டிக்குள் இறங்கிய மாணவியால் தொட்டிக்கு மேலே ஏறி வர முடியவில்லை. இதனால் அவர் தொட்டிக்குள் இருந்து கொண்டு சத்தம் போட்டுள்ளார். இதையறிந்த பள்ளி ஊழியர்கள், சிறிய ‘ஸ்டூல்’ ஒன்றை தொட்டிக்குள் இருந்த மாணவியிடம் கொடுத்தனர். பின்னர், அதை பயன்படுத்தி அந்த மாணவி தொட்டிக்குள் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிக்கு படிக்கச்செல்லும் மாணவிகளை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சொன்ன பள்ளி நிர்வாகத்தை பெற்றோர்களும், பொதுமக்களும் கண்டித்ததுடன், இதுபற்றி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்