அருந்ததியர் சமூகத்தினருக்கு சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தீர்மானம்
விருதுநகர் அருகே கவுண்டம்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை மாநாடு பாண்டியராஜ் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே கவுண்டம்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை மாநாடு பாண்டியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிக்குமார் அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.
கிளையின் செயலாளராக பாண்டியராஜ் தேர்வு செய்யப்பட்டார். கவுண்டம்பட்டியில் பெண்களுக்கு 2 சுகாதார வளாகங்கள் அமைக்க வேண்டும். அருந்ததியர் சமூக மக்களுக்கு மயானத்தில் தகன மேடை கட்டித் தரவேண்டும். சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும். தெரு விளக்குகள் மற்றும் சாலைகளை சீரமைக்க வேண்டும். அருந்ததியர் சமூக மக்களின் பழுதடைந்த வீடுகளை மராமத்து செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை நிறைவேற்றக்கோரி சிவகாசி யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.