ராமநாதபுரத்தில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க.வினர் மலர் அஞ்சலி

ராமநாதபுரத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2017-12-05 21:30 GMT

ராமநாதபுரம்,

மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் நகரசபை தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் யூனியன் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சாமிநாதன், எம்.ஜி.ஆர்.இளைஞர்அணி துணை செயலாளர் நாகநாதசேதுபதி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டியன், நகர் துணை செயலாளர் செல்வராணி ரெத்தினம், ராமசேது, ராம்கோ துணை தலைவர் சுரேஷ், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் வீரபாண்டியன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ரெத்தினம், ஏபிசந்திரன், மகளிரணி வாசுகி,நகர் அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த சரவணன், செந்தில்குமார், மண்டபம் ஒன்றியத்தை சேர்ந்த பாலசங்கர், சேதுபதி என்ற மங்களநாததுரை, ஆதில்அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் ராமநாதபுரம் மத்திய கொடிக்கம்பம் பகுதியில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதாசசிக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அரிதாஸ், பொதுக்குழு உறுப்பினர் பலராமன், பொறியாளர் கமல், நகர் செயலாளர்கள் ராமநாதபுரம் ரஞ்சித், கீழக்கரை சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் முத்தீஸ்வரன், திருப்புல்லாணி முத்துசெல்வம், வாலியா கணேசன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் இந்திராமேரி, சேதுபதிராஜன், விஸ்வநாதன், அவைத்தலைவர் ஆறுமுகம், ஜெ.பேரவை செயலாளர் தவமுனியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் வன்னியராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பரமக்குடியில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஏற்பாட்டில் அனைத்துப்பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். 34–வது வார்டு காமராஜர் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு நிலவள வங்கித்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வின்சென்ட்ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதையொட்டி அ.தி.மு.க நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் இதில் முன்னாள் நகர் செயலாளர்கள் வரதன், ஜபருல்லாகான், நகர் பேரவை துணை செயலாளர் அழகர், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மணிகண்டன், இளைஞர் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் வக்கில் இந்திரஜித் துணைச்செயலாளர் தினேஷ், ரமேஷ்கண்ணன், ஜெயலலிதா பேரவை தினேஷ் ஒன்றிய அவைத்தலைர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இதேபோல தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு ஜெயலலிதா உருவப்படத்திற்கு கலையூர் ஊராட்சி கழக செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய மாணவரணி மாரிச்செல்வம், ஒன்றிய பாசறை துணைசெயலாளர் நாகராஜன் நகர் மாணவரணி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்