மராட்டியத்தில் 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை மும்பை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
‘ஒகி’ புயல் எதிரொலியாக மராட்டியத்தில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மும்பை உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
வங்கக்கடலில் உருவான ‘ஒகி’ புயல் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கி எடுத்தது. நெல்லை, தூத்துக்குடி, கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. கேரள மாநிலத்தையும் புரட்டி எடுத்தது. கடலுக்குள் மீன்பிடிக்க சென்று மாயமான ஏராளமான மீனவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இன்னும் பல மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கதி கலங்கி போய் உள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளா மக்களை துயரத்தில் தவிக்க விட்ட, ‘ஒகி’ புயல் லட்சத்தீவில் இருந்து வடமேற்காக நகர்ந்தது. இந்த புயல் தீவிரமடைந்து குஜராத் நோக்கி திரும்பி உள்ளது.
இதன் காரணமாக வட, மத்திய மராட்டியம் மற்றும் தென் குஜராத் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
‘ஒகி’ புயல் நகர்வு காரணமாக வட, மத்திய மராட்டியம் மற்றும் தென் குஜராத் பகுதிகளில் 2 நாட்கள் கனமழை பெய்யக் கூடும். மும்பையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மராட்டியம் மற்றும் குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மும்பையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. ஆகையால், மும்பையில் லேசான மழை ஆரம்பித்து இருக்கிறது. புயல் நெருங்குவதால், மழையின் தீவிரம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மும்பையில் கடற்கரைகளில் வழக்கத்துக்கு மாறாக கடல் அலைகள் சீறி பாய்வதால், பொதுமக்கள் யாரும் 2 நாட்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சியின் பேரிடர் மீட்பு குழு எச்சரிக்கை விடுத்தது.
இதனிடையே, நேற்று மாலை மும்பையில் தாதர், ஒர்லி, காட்கோபர் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை இரவு 8 மணிக்கு பின்னரும் நீடித்தது. இதற்கிடையே வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை கரைகளில் நிறுத்தி இருந்தனர்.
இந்த புயல் மராட்டியத்தில் பாதிப்பை ஏற்படுத்தினால், அதனை எதிர்கொள்ள மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து உள்ளது.
மேலும் ‘ஒகி’ புயல் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை, தானே, ராய்காட், பால்கர், சிந்துதுர்க், ரத்னகிரி ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.