பஸ்சில் இருந்து கீழே விழுந்த மாற்றுத்திறனாளி வாலிபருக்கு இழப்பீடு
பஸ்சில் இருந்து கீழே விழுந்த மாற்றுத்திறனாளி வாலிபருக்கு இழப்பீடு உத்தரவிட்டது.
மும்பை,
மும்பை அண்டாப்ஹில் பகுதியில் கடந்த 2009–ம் ஆண்டு 11–ந்தேதி பெரோஷ்கான்(வயது31) என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் பெஸ்ட் பஸ்சில் முன்வாசல் வழியாக ஏறினார். மாற்றுத்திறனாளி வாலிபர் ஏறுவதை பஸ் டிரைவர் கவனிக்கவில்லை. டிரைவர், மாற்றுத்திறனாளி வாலிபர் ஏறுவதற்குள் பஸ்சை எடுத்தார். இதனால் அந்த வாலிபர் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில், அவரது கால்களில் காயம் ஏற்பட்டது.
எனவே அவர் இழப்பீடு கேட்டு மும்பை மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையில், பெஸ்ட் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் தான் பெரோஷ்கான் கீழே விழுந்து காயமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து பெரோஷ்கானுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு பெஸ்ட் நிர்வாகத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.